பிரதமர் திட்டத்திற்கு ஆள் சேர்க்க சட்டவிரோத நடவடிக்கை; சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்


பிரதமர் திட்டத்திற்கு ஆள் சேர்க்க சட்டவிரோத நடவடிக்கை; சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
x

அஞ்சல் ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

மதுரை,

பிரதமரின் சூரிய ஒளி மின்சார மானியத் திட்டத்திற்கு ஆள் சேர்க்க அஞ்சல் ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி, அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்," பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்திற்கு (சூரிய ஒளி மின்சார மானியத் திட்டம்) இலக்குகள் நிர்ணயித்து ஆள் சேர்க்குமாறு அஞ்சல் நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடும் வேலைப்பளுவுடன் உள்ள அஞ்சல் ஊழியர்கள் எந்தப் பயிற்சியும் இல்லாது, பணிக்குத் தேவைப்படும் கைபேசியும் வழங்காமல் ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்குமாறு கடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அஞ்சல் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை சட்ட விரோதமானது, தார்மீக நெறிகளுக்கும் முரணானது. ஆகவே அஞ்சல் நிர்வாகம் இச்சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும், எந்த ஊழியரையும் ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற வற்புறுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story