பிளஸ்-2 தேர்வில் இலஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
பிளஸ்-2 தேர்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 61 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். மாணவி ப்ரிஷா தமிழில் 95 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்களும், இயற்பியலில் 95 மதிப்பெண்களும், வேதியியலில் 96 மதிப்பெண்களும், உயிரியலில் 96 மதிப்பெண்களும், கணிதத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். மாணவர் சாபீக் தமிழில் 85, வேதியியலில் 100, உயிரியலில் 97, கணிதத்தில் 98 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். மாணவி ஜெனிஷா இவாஞ்சலின் தமிழில் 90, ஆங்கிலத்தில் 89, இயற்பியலில் 92, வேதியியலில் 98, உயிரியலில் 95, கணிதத்தில் 93 மதிப்பெண்களும் பெற்றனர்.
தமிழில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், ஆங்கிலத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், கணிதத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், இயற்பியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், வேதியியலில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்களும், உயிரியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், கணினி அறிவியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பயன்பாடு பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும் எடுத்தனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதா பிரியா ஆகியோர் பாராட்டினர்.