மகிழ்ச்சியாக இருந்தால் நோய் வராது


மகிழ்ச்சியாக இருந்தால் நோய் வராது
x

மகிழ்ச்சியாக இருந்தால் நோய் வராது என்று வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.

வேலூர்

வேலூர் கோட்டை சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இதய பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன், கவுதமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில் ஜி.வி.செல்வம் பேசுகையில், சிரிப்புதான் சிறந்த மருந்து. தினமும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும். மனிதனாக பிறந்த அனைவருக்கும் மன அழுத்தம் உண்டு. அது நானாக இருந்தாலும், அதானி, அம்பானியாக இருந்தாலும் ஒன்றுதான். டி.வி.யில் வரும் நாடகங்களை பார்த்து அழுவதை விட காமெடி காட்சிகளை பார்த்து சிரிக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தால் நோய்கள் வராது. போலீசார் அவர்களை அவர்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் பணி நிலையை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும என்றார்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வக்கீல் பி.டி.கே.மாறன், கண்ணா ஓட்டல் உரிமையாளர் பூமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story