'எனது பணியில் மகிழ்ச்சி இல்லையென்று நான் உணர்ந்தால் அப்போதே பணியை விட்டுச் செல்வேன்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


எனது பணியில் மகிழ்ச்சி இல்லையென்று நான் உணர்ந்தால் அப்போதே பணியை விட்டுச் செல்வேன் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும், நமது பணியை மகிழ்ச்சியுடன் செய்தாக வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவர்கள் நிகழ்த்திய பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளை கவர்னர் ஆர்.என்.ரவி கண்டு ரசித்தார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆர்.என்.ரவி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

அப்போது மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கவர்னர் ஆர்.என்.ரவி, "நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும், உங்களது பணியை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்தாக வேண்டும். நான் தற்போது செய்யும் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்.

உங்கள் பணி உங்களுக்கு மகிழ்ச்சியை தராவிட்டால், உடனே அந்த பணியை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் சென்று விடுங்கள். என பணியில் மகிழ்ச்சி இல்லை என்று நான் உணர்ந்தால் அப்போதே எனது பணியை விட்டுச் சென்று விடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.




Next Story