ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென விரும்பினேன்: லதா ரஜினிகாந்த் பேட்டி


ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென விரும்பினேன்: லதா ரஜினிகாந்த் பேட்டி
x

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சென்னை,

பண மோசடி புகாரில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் லதா ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"ஒரு முக்கியமான தருணத்தில் உங்களை நான் சந்தித்து வருகிறேன். கோச்சடையான் படத்திற்கு கடன் வாங்கினார்கள் அதற்கு நான் சாட்சி கையெழுத்திட்டேன். தலையில் துப்பட்டா அணிந்து சென்றதாக சமூக வலைதளங்களில் என்னை தவறாக பேசுகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. நியாயத்திற்காக் தான் நான் சென்றேன்.

என்னை தாக்குவதற்கான காரணம் நான் ஒரு பெண் என்பதால் தான். நியாத்திற்கு ரஜினிகாந்த் கூட துணையாக இருப்பார். சட்ட ரீதியாக நான் எப்படி வழக்கை அணுக வேண்டுமோ, அப்படி அணுகினேன். இந்த கோச்சடையான் படம் குறித்து பல ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருகிறது.

இதனால் நானும் என்னுடைய கணவரும் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். இன்றைய காலகட்டத்தில் என்னுடைய கணவர் அரசியலுக்கு வராதது எனக்கு வருத்தமாகத்தான் உள்ளது. என்னுடைய கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மான நஷ்ட வழக்கு போடுவதற்கு நான் யோசனை செய்து கொண்டு இருக்கிறேன். என் கணவர் அரசியல் வருவதற்காக என்னுடன் ரகசியமாக அதிகமாக பேசி உள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story