நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் - உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்


நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் - உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்
x

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சாமி தரிசனம் செய்தார்.

ராமேசுவரம்,

'என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்' என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது.

இந்த நடைபயண தொடக்க விழா நேற்று மாலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு ராமேசுவரத்தில் ஓட்டல் ஒன்றில் அமித்ஷா, அண்ணாமலை தங்கினர்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா ராமேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசாமி கோவிலுக்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராமேசுவரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது.

இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.




Next Story