நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி


நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Jun 2023 11:35 PM IST (Updated: 27 Jun 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

அன்னை மிரா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி பங்கேற்றார்.

ராணிப்பேட்டை

அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயின்று பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி தடையின்றி சேருவதற்காக நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ், செயலாளரும், பொருளாருமான ஜி.தாமோதரன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் எஸ்.வளர்மதி தலைமை தாங்கி அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, முதல் பட்டதாரி மாணவர்களுக்கான கல்விச்சலுகை, 7.5 சதவீதம் சிறப்பு கல்வி சலுகை மற்றும் அரசு வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான வழிகள் குறித்தும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு கல்லூரிகள், பாடப்பிரிவுகள் அவற்றின் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சுமதி, மோகன், கல்லூரி இயக்குனர்கள் ஆர்.பிரசாந்த், டி.கிஷோர், முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர், முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story