வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு சிறைநாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை வழக்கில்            கணவர், மாமியாருக்கு சிறைநாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x

வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 10 ஆண்டும், மாமியாருக்கு 7 ஆண்டும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 10 ஆண்டும், மாமியாருக்கு 7 ஆண்டும் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நர்சு தற்கொலை

பளுகல் அருகே மூவோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27), லாரி டிரைவர். இவருடைய தாயார் சசிகலா (47).

இந்தநிலையில் ராஜேசும், களியக்காவிளை பகுதியை சேர்ந்த சவுமியா (24) என்பவரும் காதலித்து வந்தனர். சவுமியா களியக்காவிளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றினார்.

கடந்த 9-2-2009 அன்று இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாரும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். ராஜேஷ், சவுமியாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு குடும்பம் நடத்தினார்.

நாட்கள் கடந்த நிலையில் ராஜேஷ் தன்னுடைய தாய் சசிகலாவுடன் சேர்ந்து சவுமியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் மனமுடைந்த சவுமியா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் 16-9-2009 அன்று நடந் தது. மேலும் இதுபற்றி பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சசிகலாவை கைது செய்தனர்.

தாய்-மகனுக்கு சிறை

மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோா்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், ராஜேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார்.

ராஜேசின் தாயார் சசிகலாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமாக விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகினார்.


Next Story