பேரையூர் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது


பேரையூர் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது
x

பேரையூர் அருகே இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்

மதுரை

பேரையூர்,


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருத்து வேறுபாடு

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 33). இவருடைய மனைவி செல்வபிரியா (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சின்னச்சாமி, மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வ பிரியாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வபிரியா தனது தந்தை ஊரான மூணாறுக்கு சென்று விட்டார். பின்னர் சமாதானம் பேசி செல்வப்பிரியாவை ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

கழுத்தை அறுத்துக்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வபிரியா வீட்டில் இருக்கும் போது, சின்னசாமி அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வ பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி சாப்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் சின்னச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர்.

போராட்டம்

இதற்கிடையே செல்வபிரியாவின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள், நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகே போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், செல்வபிரியாவை, கணவர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேர் கொலை செய்து விட்டனர், அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுக்கொண்டனர்.


Next Story