ரூ.28½ லட்சம் உண்டியல் வசூல்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.28½ லட்சம் உண்டியல் வசூலானது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சாமி கோவில் உள்ளது. கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ. 28 லட்சத்து 58 ஆயிரத்து503 ரொக்கம், 410 கிராம் தங்கம், 422.500 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story