உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி


உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி
x

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி கிடைத்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஏராளமானோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 31 ஆயிரத்து 878 ரொக்கம். தங்கம் 88 கிராம் 500 மில்லி கிராம், வெள்ளி 2 கிலோ 310 கிராம் இருந்தது. கோவிலில் பாதி உண்டியல்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் உண்டியல் வருமானம் ரூ. 1 கோடியை தாண்டி உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் மீண்டும் கோவிலில் மீதமுள்ள உண்டியல்களும் திறந்து எண்ணப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story