மணிப்பூர் கலவரத்தை கண்டித்துமனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து செஞ்சியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
செஞ்சி,
மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து செஞ்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆபித் பாஷா, மாவட்ட துணை செயலாளர் பாரக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி முகமது ஆஷிக், யூசுப் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செஞ்சி ஹர்ஷத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தாக்தின், மாநில பொருளாளர் ஷான்ராணி, பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி சுந்தரம், தமிழ்நாடு விவசாய வட்டக் குழு தலைவர் மாதவன், பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story