கொரோனா பாதித்த அரசு ஊழியருக்கு எத்தனைநாள் லீவு? - மனிதவள மேலாண்மைத் துறை புதிய தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான விடுப்பு குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான விடுப்பு குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மனிதவள மேலாண்மைத் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்தாலும், சிகிச்சையில் இருந்தாலும் அத்தனை நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மருத்துவரின் சான்றிதழ் அடிப்படையில் தனிமைப்படுத்தலில் இருந்த நாட்கள், சிகிச்சையில் இருந்த நாட்களுக்கு விடுப்பு வழங்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள், அதற்கான அறிவிப்பை சமர்ப்பித்தால், அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story