மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்
அரசு புறம்போக்கு இடத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமையில், அந்த கிராம மக்கள் வந்து கலெக்டர் லலிதாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை அருகே பட்டமங்கம் கிராமத்தில் தச்சமங்களம் என்ற பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் 13 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் முறையாக மின் இணைப்பு பெற்று, வீட்டு வரி செலுத்தி வருகிறோம். நாங்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கவில்லை. வீட்டுமனைப்பட்டா இல்லாததால் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்ட அனுமதி வழங்கியும், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து குடியரசு தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் எங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.