ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
குடியாத்தம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கவுண்டன்ய மகாநதி ஆற்று ஓரம் உள்ள பாவோடும்தோப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
தாசில்தார் சித்ராதேவி தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் வாசுகி, சுபிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது வீடுகளை இழந்த 7 பேருக்கு நெல்லூர்பேட்டை அடுத்த மீனுரான்பட்டி பகுதியில் இலவச வீட்டு மனைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.