வீடு புகுந்து 2½ பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 2½ பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 2½ பவுன் நகை திருட்டு

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருடைய மனைவி ஆஷா (வயது 29). ஜெகன் கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ஆஷா தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் மார்த்தாண்டம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலையில் ஆஷாவின் வீடு திறந்து கிடப்பதாக உறவினர் ஒருவர் அவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் நகை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆஷா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.


Next Story