வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சீதா (வயது 34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story