வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் சாவு


வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் சாவு
x

சேலம் அருகே வேன் மோதி ஓட்டல் உரிமையாளர் இறந்தார்.

சேலம்

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் கே.எம்.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் அயோத்தியாப்பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்தார். பின்னர் சேலம்- சென்னை புறவழிச்சாலையை கடக்க நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story