ஓசூர்: மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
சுமார் 13 கிலோ மீன்களில், கெட்டு போகாமல் இருக்க ‘ஃபார்மலின்’ ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் பகுதியில் உள்ள மீன் கடைகளில் மீன்வள சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல வகையான மீன்களை 'ஃபார்மலின்' சோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் 2 கடைகளில் சுமார் 13 கிலோ எடை கொண்ட மீன்களில், கெட்டு போகாமல் இருக்க 'ஃபார்மலின்' ரசாயனம் பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஃபார்மலின் கலந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நிலத்தில் புதைத்து அழித்ததுடன், மீன் வியாபாரிகளை எச்சரித்துச் சென்றனர்.
Related Tags :
Next Story