மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞன் பாரதியாரின் நினைவுகளைப் போற்றுகிறேன் - கமல்ஹாசன் டுவீட்


மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞன் பாரதியாரின் நினைவுகளைப் போற்றுகிறேன் - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 11 Sept 2023 4:45 PM IST (Updated: 11 Sept 2023 5:09 PM IST)
t-max-icont-min-icon

மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞன் பாரதியாரின் நினைவுகளைப் போற்றுகிறேன் என்று கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.

சென்னை,

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர், "36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் 'பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்' என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.

பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறார். அதில் முதன்மையானது 'கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்'. மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story