பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை


பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை
x

பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலய முதலாவது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் ஆலய அசன விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மற்றும் 2-வது நாட்களில் மாலை நற்செய்தி கூட்டம் நடந்தது. 3-ம் நாள் அருணோதய பிராத்தனை, பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பிரதான பண்டிகை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது.

ஸ்தோத்திர காணிக்கை

அதனைத்தொடர்ந்து மதியம் நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் ஆலய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருமனையை திறந்து வைத்து, பண்டிகை ஆராதனையில் தேவசெய்தி வழங்கினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஸ்தோத்திர காணிக்கை படைத்தனர். இரவில் ஐ.எம்.எஸ். கலைநிகழ்ச்சி நடந்தது.

விழாவில் பேராயரம்மா ஜாய் பர்னபாஸ், டாக்டர்கள் கிறிஸ்டோபர், அலெக்ஸ் எட்வர்ட்ஸ், குருவானவர்கள் டி.சி.ஜி.துரைசிங், பி.சிமியோன், டி.ஜே.கே.பர்னபாஸ், யோசுவா, ஜெபத்தான், சுரேஷ்குமார், ஜான் சாமுவேல், அகஸ்டின், ஏனோக் பாஸ்கர், ஜெபக்குமார், ஆசீர் சாமுவேல், ஜெயசிங், ஆசீர்வாதம் டேவிட், ஸ்டான்லி இம்மானுவேல், ஆபிரகாம் அருள்ராஜா, பால்ராஜ், அந்தோணிராஜ், பொன்ராஜ், சபை ஊழியர்கள் ஜெஸ்ஸன் ராஜ், கிறிஸ்டோபர் கிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வழக்கறிஞர் த.காமராஜ், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் எம்.ஜெஸ்கர்ராஜா, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டபிள்யு.ராஜசிங், காங்கிரஸ் நிர்வாகிகள் டி.ராமஜெயம், எம்.ஜேக்கப்பாண்டி, டி.பத்மசிங் செல்வமீரான், தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், இலங்குளம் பஞ்சாயத்து தலைவருமான வி.இஸ்ரவேல் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், அ.தி.மு.க. பரப்பாடி கிளை செயலாளர் அபி ஸ்வீட்ஸ் அ.வேல்துரை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் எஸ்.ஜோனல், ஆர்.ஜெயபால், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வி.மெகுலன் ராசா, நெல்லை ஜெயசீலன், எழுத்தாளர் மதுரா, தொழிலதிபர்கள் ஜெ.ராஜபிரபு, சாலமோன், பி.ஜானகிராமன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் வி.யோவான்பிரபு, பி.ஐன்ஸ்டீன், கவுன்சில் உறுப்பினர் எஸ்.ஜெருஷ் ஐசக் மற்றும் சபைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story