பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்


பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
x

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலய திருவிழா கொடியேற்றம்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் 326-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு 3 திருப்பலிகள் நடத்தப்பட்டது. மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பங்கு தந்தை மார்டின் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். பின்னர் மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

திரளானவர்கள் பங்கேற்றனர்

இதில் தென்மண்டல பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ், அழகப்பபுரம் பங்குத்தந்தை செல்வ ராயர், சேவியர்புரம் பங்குத்தந்தை சூசை மணி, நொச்சிகுளம் பங்குத்தந்தை ஜோசப் ரத்தினராஜ், மற்றும் ரோசாரியோ சபை அருட்தந்தையர்கள், ஜெபமாலை மாதா அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தேர்பவனி

9-ம் நாள் விழாவான வருகிற 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. பின்னர் மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் அன்னையின் தேர்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை மார்ட்டின், உதவி பங்குத்தந்தை சவரிராஜ், பங்கு மேய்ப்பு பணி குழுவினர் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.


Next Story