விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்களை நியமிப்பதா? - ராமதாஸ் கண்டனம்


விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்களை நியமிப்பதா? - ராமதாஸ் கண்டனம்
x

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத்துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தனியார் நிறுவனம் மூலம், அவுட்சோர்சிங் முறையில் 400 டிரைவர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக பறிக்கும் இந்த முறை கண்டிக்கத்தக்கது.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத்துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது. விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்களை நியமிப்பது இத்துடன் முடிவடைந்து விடாது. இதுவே வழக்கமாக மாறி, ஒரு காலத்தில் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மட்டும் தான் அனைத்துத் துறைகளிலும் பணியில் இருப்பார்கள். அத்தகைய நிலை தடுக்கப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக, விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அனைத்து உரிமைகளுடன் கூடிய நிரந்தர டிரைவர்களை அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story