'காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்' - இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
அம்பேத்கர் காவி உடை, விபூதி, குங்குமம் வைத்தவாறு இடம்பெற்றிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியிருந்தார். அந்த போஸ்டரில் 'காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்' என எழுதப்பட்டிருந்தது
காவி உடை, விபூதி பூசி, குங்குமம் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்பட போஸ்டர் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர்.