இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்:
இந்து மதம் குறித்தும், இந்துக்கள் குறித்தும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாகவும், இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் ஆ.ராசாவைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நேற்று மாலையில் மீனாட்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மாநகர ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் மார்த்தாண்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொதுச் செயலாளர் சிவா, தோவாளை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். கூட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.