இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் கனல் கண்ணனை கைது செய்ததை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் சுடலைமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, நகர தலைவர் மாயாண்டி, நகர பொது செயலாளர் முத்துராஜ், நகர பொருளாளர் பட்டு இசக்கி, ஒன்றிய செயலாளர் ராஜீ, ஆனந்த கணேசன், ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார், கார்த்திகை கந்தன், வினோத், சுப்பையன் உள்பட பலர் 19 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

* இந்து முன்னணியின் மாநில கலை மற்றும் இலக்கிய பிரிவு செயலாளர் கனல் கண்ணனை கைது செய்த காவல் துறையை கண்டித்து, கோவில்பட்டியில் பயணிகள் விடுதி முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதையடுத்து 12 பேரை கைது செய்தனர்.


Next Story