இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

திங்கள்சந்தையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

கோட்டார் அருகே பக்தி பாடகர் சிவசந்திரன் வாகனம் மீது சிலர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரியும் திங்கள்சந்தை பிலாக்கோடு சந்திப்பில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மதுசூதனன், கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மாங்காரை மணிகண்டன், ராஜேஷ் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story