கடலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் ; 57 பேர் கைது


கடலூரில்      இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் ;     57 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 57 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்


சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சனில்குமார் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த புதுநகர் போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றனர். இதனால் போலீசாருடன், இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story