இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
கோவில்பட்டியில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி காமராஜ் நகர் இந்து முன்னணி அலுவலகத்தில், நேற்று மாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக் குமார், நெல்லை கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன், ஜெயச்சந்திரன் மற்றும் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்த மாதம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 87 இடங்களில் பாரத மாதா பூஜை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story