இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்; 22 பேர் கைது


இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்; 22 பேர் கைது
x

நெல்லை டவுனில் இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 5-ந்தேதி தைப்பூச திருவிழாவின் போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து மூலஸ்தானம் முன்பு வரை சென்று பல்வேறு இடங்களை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நெல்லையப்பர் கோவில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நேற்று கண்ணில் கருப்பு துணி கட்டி நெல்லையப்பர் கோவில் முன்பு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாவட்டபொதுச் செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, ராஜசெல்வம், செல்வராஜ், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story