மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி; நாளை தொடங்குகிறது


மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி; நாளை தொடங்குகிறது
x

மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை தொடங்குகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை), நாைள மறுநாள்(வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி நாளை பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நாளை மறுநாள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேப்பூர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட உதவிகள் செய்து தரப்படவுள்ளது. எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பிற பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story