பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அமைச்சர் பொன்முடி


பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அமைச்சர் பொன்முடி
x

பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அனைவரிடமும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது. இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும். இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர் கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம். கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கல்வி வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தப்படுவதில்லை. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம் என்று கூறினார்.


Next Story