கம்பு சாகுபடியில் அதிக மகசூல்
ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் நல்ல மகசூல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் கம்பு சாகுபடியில் நல்ல மகசூல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கம்பு சாகுபடி
ஆலங்குளம் அருகே உள்ள அனந்தப்பநாயக்கர் பட்டி, சாமிநாதபுரம், குறிச்சியார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் உள்ள எண்ணற்ற விவசாயிகள் கம்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கம்பு சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
நல்ல விளைச்சல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது எண்ணற்ற விவசாயிகள் கம்பினை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளை விட தற்போது மகசூல் நன்றாக உள்ளது.
விளைச்சல் நன்றாக இருப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டல் முதல் 12 குவிண்டல் வரை மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் கம்பு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டும் நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். மாட்டு தீவனங்களுக்கு அதிகமாக பயன்படுவதால் வியாபாரிகள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.