எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்
பயிர் மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என்று திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.
பயிர் மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என்று திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.
வித்துப்பயிர்களின் அரசி
எள் பயிரானது எண்ணெய் வித்துப்பயிர்களில் மிகவும் முக்கியமான மற்றும் பாரம்பரியமான ஒன்றாகும். எண்ணெய் வித்துப்பயிர்களின் அரசி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொடர் பயிருக்கும் கலப்பு பயிருக்கும் மற்றும் தனி பயிருக்கும் ஏற்றதாகும். எள்ளானது நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையதாகும்.
மேலும் இதன் வேரானது மண் அமைப்பினை மாற்றம் செய்வதனால் நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது. நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மை படுத்த வேண்டும். பின்னர் 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் கலந்து விதைப்பது நல்லது. அப்போது தான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். எள்ளை பொருத்தவரை தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. செடியை வாட விட்டு தண்ணீர கட்டினால் இலை குறைந்து காய் அதிகமாக காய்க்கும். மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும்.
விதை இருப்பு
இரவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும் 100 கிராம் அசோஸ்பைரெல்லாம், 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றுடன் விதைகளை சேர்க்க வேண்டும் வடித்த கஞ்சியை ஆற வைத்து அதில் விதைக்கலவையை சேர்க்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 30 கிலோ யூரியா. பொட்டாசியம் என்ற அளவில் உரமிட வேண்டும். 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், எட்டு கிலோ இட வேண்டும்.
விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். முதல் களை எடுத்ததில் இருந்து 15 நாட்கள் கழித்து அடுத்த களை எடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பயிர் மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம். மேலும் திருவாரூர், பின்னவாசல், வைப்பூர், தப்பாலாம்புலியூர் ஆகிய வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் விதை இருப்பில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.