வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

வீர, தீர செயல்புரிந்த குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் காசோலையுடன் தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.

இதற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவராகவும், தமிழகத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது சிறப்பான தனித்துவ சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருத்தல் உள்ளிட்ட வீரதீர செயல்கள் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படத்துடன் செய்த வீரதீர செயல்களை ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பு, ஆதாரங்களை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், முதல் தளம் பி-பிளாக், கலெக்டர் அலுவலகம், திருப்பத்தூர் என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story