கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சந்தேகங்களை தீர்த்து வைக்க உதவி மையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சந்தேகங்களை தீர்த்து வைக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சந்தேகங்களை தீர்த்து வைக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உதவி மையங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் முறையே உதவி மையங்கள் பிரத்யேகமாக செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
பொது மக்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது எவ்வாறு மேல்முறையீடு செய்து கொள்வது,
இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டும் என்றால் எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் அல்லது திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு இருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் இந்த வசதியினை அனைத்து தரப்பு பொதுமக்களும், தகுதியுள்ள பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.