காவலர் தேர்வு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இணையவழி உதவி மையம்

காவலர் தேர்வு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இணையவழி உதவி மையம்
x

காவலர் தேர்வு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இணையவழி உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.

திருவாரூர்

காவலர் தேர்வு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இணையவழி உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.

காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்விற்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறியதாவது:-

இணையதளம்

இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்விற்கான விண்ணப்பங்களை கடந்த 7-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி முடிய http://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அதற்கான விருப்பமும், தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளம் வாயிலாக ஒருமுறை பதிவு மற்றும் விண்ணப்பம் சமர்ப்பித்தல் செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற உதவி மையத்தினை அணுகலாம். இந்த உதவி மையமானது வருகிற 15-ந் தேதி முடிய திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தரை தளத்தல் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story