'ஹெல்மெட்' விழிப்புணர்வு ஊர்வலம்
‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சாவூர்
பாபநாசம் வட்டச் சட்டப் பணிகள் குழு மற்றும் போலீஸ் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் கனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அரசு கூடுதல் வக்கீல் சுதா, அரசு வக்கீல் வெற்றிச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனிதா கிரேசி, பகவதி சரணம், அரசு ஓட்டுனர் போதகர் முத்துக்குமரசாமி, சட்டப்பணிகள் குழு அலுவலக பணியாளர் ராஜேஷ்குமார், சட்ட தன்னார்வலர்கள் தனசேகரன், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story