தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம்


தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை விளக்கம்
x

கனமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 25, 26-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு இயந்திர படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் ஒலிபெருக்கி, குருஞ்செய்தி மூலம் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Next Story