தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.?


தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.?
x

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று (04.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* கனமழை காரணமாக சென்னையில் இன்று (04.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (4.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (04.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story