நெல்லையில் பலத்த மழை


நெல்லையில் பலத்த மழை
x

நெல்லையில் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று காலை வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. 3.15 மணி அளவில் திடீரென்று பலத்த மழை கொட்டியது.

நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி அமைத்துள்ள தற்காலிக பஸ் நிறுத்த பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல் நெல்லை புறநகர் மாவட்டம், தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- சேரன்மாதேவி-25, அம்பை-1, பாளையங்கோட்டை-5, நெல்லை-4.


Next Story