நாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது


நாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
x

நாகர்கோவிலில் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குளிர்ந்த சீதோஷ்ண நிலை

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர தாழ்வு பகுதியாவும், பின்னர் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்ததால், மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

நாகர்கோவிலில் பலத்த மழை

இந்தநிலையில் நேற்று மாலை பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, தக்கலை, திருவட்டார், குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், வீயன்னூர், மாத்தூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன் கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மிதமாக சாரல் மழை பெய்தது.

இதே போல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதி மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை நீடித்தது. ஆனால் நாகர்கோவிலில் நேற்று இரவில் சிறிது நேரம் பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீரும், மழை நீரும் கலந்தபடி சாலையில் சென்றதை காண முடிந்தது.

பரவலான மழையால் அணைகளுக்கு கணிசமாக தண்ணீர் வந்தது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்தது.


Next Story