குஜிலியம்பாறையில் பலத்த மழை
குஜிலியம்பாறையில் பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல்
குஜிலியம்பாறையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குஜிலியம்பாறை மெயின் ரோட்டில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். இதேபோல் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
குஜிலியம்பாறை மெயின் ரோடு சாலை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அதேபோல் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. இதனால் சிறு மழை பெய்தாலே சாலை சகதிக்காடாக மாறி வருகிறது. தற்போது பலத்த மழையால் சாலையே தெரியாதபடி குளமாக மாறியது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story