குமரி மாவட்டத்தில்மலையோர பகுதிகளில் கன மழை


குமரி மாவட்டத்தில்மலையோர பகுதிகளில் கன மழை
x

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.

கோடை வெயில்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக அடித்து வருகிறது. வெயிலின் வெப்பத்ைத தாங்க முடியாமல் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகளில் இதர இடங்களை விட அதிமாக மழை பெய்து வருகிறது.

நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, சிற்றாறு, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. மேலும் திற்பரப்பு அருவிக்கும் தண்ணீர் வரத்து மிதமாக இருந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மழையின் காரணமாக மலையோரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. மலையோரப் பகுதிகளில் தென்னை, வாழை, அன்னாசி போன்றவை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பரவலாக மழை பெய்து வருவதால் பால் வெட்டும் தொழில் தொடங்கியுள்ள ரப்பர் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story