தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
x

image courtesy;PTI

தினத்தந்தி 22 April 2024 12:08 PM IST (Updated: 22 April 2024 12:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இன்று தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகம், கர்நாடகா வடக்கு, மத்திய பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் கிழக்கு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story