குலசேகரத்தில் ஓட்டலில் மதுவை பதுக்கி விற்ற உரிமையாளர் கைது


குலசேகரத்தில் ஓட்டலில் மதுவை பதுக்கி விற்ற உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 10:38 PM IST (Updated: 3 July 2023 12:43 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரத்தில் உள்ள ஓட்டலில் மதுவை பதுக்கி விற்ற உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரத்தில் உள்ள ஓட்டலில் மதுவை பதுக்கி விற்ற உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

மது பதுக்கி விற்பனை

குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்து விளையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 59). இவர் குலசேகரம் சந்தை சந்திப்பில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து, சாப்பிட வருபவர்களுக்கு ரகசியமாக அதிகாலை முதல் விற்பனை செய்வதாக குலசேகரம் போலீசாருக்கு புகார் வந்தது.

கைது

அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு நேற்று காலையில் ஒருவரை அனுப்பி மது வாங்க கூறினார்கள். அதன்படி அவர் தொழிலாளி போல் நடித்து மது கேட்டார். உடனே அவருக்கு மது பாட்டில் சப்ளை செய்யப்பட்டது.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஓட்டல் உரிமையாளர் பிரபாகரனை கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்து இருந்த 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story