வேதாரண்யம் பகுதியில் மழை: நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் பகுதியில் தற்போது சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு 10 ஆயிரம் எக்டரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் தற்போது நன்றாக விளைந்து அறுவடை நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் இப்போது தொடங்கப்பட்டுள்ள சம்பா அறுவடை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்துள்ளதால் அறுவடை செய்த நெல்லை காய வைத்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் எதிர்பாராத வேளையில் பெய்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story