தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை


தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
x

மூஞ்சூர்பட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 32), டிரைவர். இவருக்கு கலைவாணி என்ற மனைவி (29) உள்ளார். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் கலைவாணி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story