மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த வாலிபர் தங்கையிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த வாலிபர் தங்கையிடம் ஒப்படைப்பு
x

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த வாலிபர் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு கருணை இல்லத்தில் வைத்து மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குணமடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 33) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நித்தினின் தங்கை குசுமா நாராயணரெட்டி பெரம்பலூருக்கு வந்தார். அவரிடம் நித்தினை போலீசாரும், கருணை இல்ல நிர்வாகிகளும் ஒப்படைத்தனர். அவர்களுக்கு குசுமா நாராயணரெட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்.


Next Story