மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் புகாரிமஸ்தான் தலைமை தாங்கினார். செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை கண்டித்தும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை மரியாதைக்குறைவாக நடத்தும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story